அக்கரைப்பற்று பிராந்தியத்தில் 12ஆவது நாளாகவும் தொடரும் தனிமைப்படுத்தல்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் 12ஆவது நாளாகவும் இ தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அக்கரைப்பற்று மத்திய சந்தை உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.

இன்று இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் ,அரசாங்கத்தின் உதவியினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரதேச செயலகங்கள் ஊடாக மக்களுக்கான நிவாரணப்பணியினை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தை பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கமைவாக சமுர்த்தி மற்றும் கிராம உத்தியோகத்தர் ரீதியாக தகவல்களை திரட்டி மாவட்ட செயலகத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேநேரம், நேற்றைய நாள் மாத்திரம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளமையினால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Related posts