திருகோணமலையில் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்..!!

திருகோணமலையிலிருந்து மிதுல புதா என்ற டெங்கி படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றையதினம் திருகோணமலை கொட்பே பகுதிக்கு அவரது சடலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கடலுக்குச் சென்றதாகவும், குறித்த மீனவர் இம்மாதம் 2ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன், சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொட்டேகொட – உடதெனிய, ரக்லிய பகுதியைச் சேர்ந்த எம்.எம்.எஸ்.இரோஷன் என்ற 31 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது மரணம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts