ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக பிரசன்ன சமல் செனரத்!

ஐக்கிய தேசிய கட்சியின் பதில் பொதுச் செயலாளராக தான் தெரிவாகியுள்ளதாக வடமேல் மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பிரசன்ன சமல் செனரத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அகில விராஜ் காரியவாசம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவில் இருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவரது நியமனம் வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த நியமனம் 2020 டிசம்பர் 31 வரை அமுலில் இருக்கும் என்றும் பிரசன்ன சமல் செனரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தினங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts