உயர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை விரிவுபடுத்துவது குறித்து நாளைய தினம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் வீரசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்பட்டு 171 சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 86 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.