யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய புரெவி! கைவரிசையை காட்டிய திருடர்கள்..!!

யாழ்ப்பாணத்தில் புரெவி புயலில் மக்கள் அச்சம் கொண்டிருந்த நிலையில், கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

மானிப்பாய் வீதியில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி அச்சுறுத்தி 7 பவுன் தங்கம் மற்றும் 50ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் சூறாவளி ஏற்பட்டால் தங்க நகை மற்றும் பணத்தை பாதுகாப்பாக எடுத்துக் கொண்டு செல்வதற்காக ஒரு இடத்தில் வைத்திருந்த போது கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

அதேவேளை ஆனைக்கோட்டை கிராமத்தில் உள்ள மற்றுமொரு வீட்டிற்கு வந்த இந்த கொள்ளையர்கள் அங்கும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் பிற்பகல் வேளையில் கொள்ளைக்காக வீட்டிற்கு புகுந்துள்ளனர். முகக் கவசம் அணிந்து இந்த நபர்கள் வீடு புகுந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts