மீண்டும் மஹர சிறைச்சாலை செல்லும் விசாரணை குழு

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணை குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.

மஹர சிறைச்சாலையில் கடந்த தினம் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த தினம் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

குறித்த குழு நேற்றைய தினம் முதன்முறையாக மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு சென்று சாட்சியங்களை பதிவு செய்தனர்.

நேற்றைய தினம் கைதிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், இன்று குறித்த குழு மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு மீண்டும் செல்லவுள்ளது.

இ்ன்றைய தினத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தண்டனை கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக அந்த குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை இடைக்கால அறிக்கையை அமைச்சருக்கு கையளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts