தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதியாக இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபரை சுடப்போவதாக அச்சுறுத்திய ஒருவரை மலேசிய பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த சந்தேக நபர், புக்கிட் அமன் பொலிஸ் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சை தாக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்களை அனுப்பியிருந்தார் என அந்நாட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மலேசிய பொலிஸ் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 507 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் 1998 ஆம் ஆண்டு பிரிவு 233 ன் கீழ் இரண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒருவரிடமிருந்து பொலிஸ் மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதாகவும் அவர் இலங்கையில் தாக்குதல்களை தொடங்கப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளதாகவும் கூறி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன