சீரற்ற காலநிலை: வவுனியாவில் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டன

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 6வீடுகள் சேதமாகியுள்ளதோடு, 4குடும்பங்களைச் சேர்ந்த 15பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை), சின்னத்தம்பனை கிராமத்தில் தற்காலிக வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்த காரணத்தினால், வீடுகளுக்குள் கைக்குழந்தைகளுடன் வாழ்வது அபாயமானது எனக் கருதி வேவலங்குளம் கிராமசேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்து, தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மக்களுக்கு  அவசர உதவியாக சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படுகின்றது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக சமூக அமைப்புகள் இணைந்து நிவாரணப் பணிகளை முன்னெடுக்கவேண்டும் என பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர்.

Related posts