சபரிமலையில் ஒரே நாளில் 17பேருக்கு கொரோனா

சபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையினால், சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானித்துள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சபரிமலை ஆலயத்துக்கு, தற்போது தினமும் 2 ஆயிரம் பக்தர்களும் சனி மற்றும்  ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள.

இந்நிலையில் நேற்று மேலும் 16 தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரி என மொத்தம் 17 பேருக்கு கொரோனா  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவேதான் தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாந்திகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts