கொரோனா தொற்றாளர்களை அழைத்து சென்ற பேருந்து விபத்து..!!

பொலநறுவை, அசேலபுர பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் பேருந்துகளின் சாரதிகளாகும்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை மருதானையில் இருந்து பூனானி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் பேருந்தில் 23 கொரோனா தொற்றாளர்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் இரண்டு கொரோனா தொற்றாளர்களும் உள்ளடங்குவதாக

Related posts