கிண்ணியா மீனவர்களுக்கு நிவாரணங்கள் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை..!!

சீரற்றகாலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணம் வழங்குமாறு திருகோணமலை- கிண்ணியா மீனவர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பு காணப்படுவதனால் கடலுக்கு செல்ல வேண்டாம் என கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேச செயலகங்களினால் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையிலே அவர்கள் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதன் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக நாங்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலுக்குச் சென்று எங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றி வந்த வேளையில் கடலுக்கு செல்லாமையினால் பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றோம்.

எனவே பாரிய கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ள எமக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் எனக்கூறியுள்ளனர்.

Related posts