அட்டுலுகமை பிரதேசத்தை சேர்ந்த மக்கள் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்கி தமது பிரதேசத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த பிரதேசம் சில காலத்திற்கு தனிமைப்படுத்தி வைக்கப்படலாம் என இராணுவ தளபதி லெப்டினட் கேர்ணல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையாக வாழும் சிலரது செயற்பாடுகள் காரணமாக முழு களுத்துறை மாவட்டத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர்களின் பிரதேசத்தில் உள்ள மக்களை பாதுகாக்க அவர்களே நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அட்டுலுகமை பிரதேசத்தை சில காலங்களுக்கு தனிமைப்படுத்தி வைக்க நேரிடும்.
ஒரு கிராமத்தில் வாழும் சிலரது செயற்பாடுகள் காரணமாக அருகில் உள்ள நகரங்களுக்கும், களுத்துறை மாவட்டத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும். இப்படியான அச்சுறுத்தல் ஏற்பட எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.