ஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்..!!

ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது.

இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவை ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக தலிபான் அமைப்பு தற்போதுவரை ஏற்கமறுத்து வருகிறது.

இதனால், அமைதி ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர எடுக்கப்படும் முயற்சிகள் பலனளிக்காமல் செல்லலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆப்கன் அரசாங்கம் – தலிபான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Related posts