பைசர் தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம்..!!

கொரோனா தொற்றுக்கு எதிரான பைசர் தடுப்பூசியை அடுத்த வாரம் பிரித்தானியாவில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி 95 சதவீதம் பலனை தருவதாக அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் தற்போது பைசர் / பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரவலான பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக பிரித்தானியா திகழ்கிறது.

இந்நிலையில் அதிக முக்கியம் என அடையாளம் காணப்படும் நபர்களுக்கு குறித்த தடுப்பூசியை செலுத்த பிரித்தானியா தயாராகியுள்ளது.

20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமான வகையில் ஏற்கனவே 40 மில்லியன் டோஸ் மருந்தை கொள்வனவு செய்ய பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் சுமார் 10 மில்லியன் டோஸ் மருந்து விரைவில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts