பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையின்றிய விற்பனைகள் மீள ஆரம்பம்..!!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையின்றிய விற்பனைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான நிலையத்தின் தீர்வையின்றிய விற்பனைகள் நேற்றையதினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விமான நிலைய அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கான தீர்வை இல்லாத வசதிகளை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும், கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் காரணமாக, வெளிநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் தீர்வையில்லாத பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கியவுடன், பயணிகள் ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு நண்பரை நியமிக்கப்பட்ட இடத்திலிருந்து பொருட்களை சேகரிக்க பரிந்துரைப்பதுடன் அவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு சம்பந்தப்பட்ட பணியாளர்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த ஆண்டில் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக, உலகளாவிய ரீதியில் சர்வதேச விமான நிலையங்கள் சில சுகாதார கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தன, அங்கு பயணிகள் முழு விமான நிலைய வசதிகளையும் வழக்கம் போல் அனுபவிக்க முடியவில்லை.

டிசம்பர் 1 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு, நாங்கள் தீர்வையில்லாத விற்பனை வசதிகளை சிறப்பு ஏற்பாடுகளுடன் மீண்டும் தொடங்குகிறோம். வருகை மண்டபத்தில் உள்ள விற்பனையகங்களை நாங்கள் பராமரிக்க உள்ளோம். அங்கு பயணிகள் தங்கள் கொள்முதலை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தீர்வையில்லாத பொருட்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

இவ் விற்பனையகங்களில் சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளி என்பன பின்பற்றப்படவுள்ளன.

மேலும் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளவர்களும், இதுவரை தங்கள் தீர்வையில்லாத விற்பனை வசதிகளை பெற்றுக்கொள்ளாதவர்களும் தமக்கான தீர்வையில்லாத பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts