ஜேர்மனியில் பாதசாரிகள் செல்லும் பகுதிக்குள் நுழைந்த கார் : குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழப்பு..!!

மேற்கு ஜேர்மனிய நகரமான ட்ரியரில் பாதசாரிகள் செல்லும் பகுதியில் வேகமாகச் சென்ற கார் மோதியதில் ஒன்பது மாத குழந்தை உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாக நடத்தப்பட்ட இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் வரை காயமடைந்தனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பாக ட்ரியர் பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஜேர்மன் சந்தேக நபர் சம்பவம் நடந்த சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர் கணிசமான அளவு மது அருந்தியதாகவும், இந்த சம்பவத்திற்கு எவ்வித பயங்கரவாத நோக்கம் ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

25 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்களும், ட்ரியரைச் சேர்ந்த 45 வயதுடைய ஒரு ஆணும் கொல்லப்பட்டதாகக் தெரிவித்துல்க்ள அதிகாரிகள் 5 ஆவது நபர் தொடர்பான வியாபாரத்தை வெளியிடவில்லை.

இதேவேளை காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts