ஜப்பான் அருகே உள்ள சர்ச்சைக்குரிய தீவில் ஏவுகணை தடுப்பை நிறுவியது ரஷ்யா..!!

ஜப்பானுக்கு அருகில்உள்ள சர்ச்சைக்குரிய தீவில் ரஷ்யா தனது ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவியுள்ளது.

ஜப்பானுக்கு மிக அருகில் உள்ள இதுருப் என்ற தீவில் வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட புதிய எஸ் -300 வி 4 ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை நிறுவியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஸ்வெஸ்டா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீவில் ஏற்கனவே விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கும் நிலையிலும் தற்போது ஏவுகணை தடுப்பு அமைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts