நாட்டில் கொவிட் – 19 தொற்றின் விளைவுகளை சமாளிப்பதற்கான தேசிய முயற்சிக்கு உதவி பெற இலங்கை அரசு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்திய விசேட கணக்குகளின் வைப்பு கடந்த 6 மாதங்களில் 227 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இலங்கை விசேட வைப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 2020 ஒக்டோபர் மாத நிலவரப்படி, அக்கணக்குளின் மொத்த வைப்பு சுமார் 272 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று இலங்கை மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கணிசமான அளவு அந்நிய செலாவணியை நாட்டிற்கு ஈர்ப்பதற்கான விசேட வைப்புக்கணக்குகளின் திறனையும், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு நிலை மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீதான நேர்மறையான தாக்கத்தையும் கருத்தில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணய வாரியத்தின் பரிந்துரைக்கமைய விசேட வைப்பு கணக்கை திறப்பதற்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
சாதாரண வைப்புத்தொகையாக தொடர்ந்த இவ்விசேட வைப்புத்தொகையின் நிதி முதிர்ச்சியடைந்தவுடன் அந்தந்த வங்கிகளின் சாதாரண கால வைப்புக்கு அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் வழங்கும் வட்டி விகிதங்களுக்கு மட்டுமே தகுதியுடையதாக இருக்கும்.
இந்த வைப்புதொகையை எந்தவொரு காலப்பகுதியிலும் இலங்கைக்கு வெளியே இலவசமாக மாற்றக்கூடிய வசதி ஏற்படுதிக்கொடுக்கப்பட்டுள்ளது.
கணக்கு வைத்திருப்பவர் அத்தகைய கணக்கைத் திறக்க அல்லது தற்போது பராமரிக்க தகுதியுடையவராக இருந்தால், உள் முதலீட்டு கணக்கு அல்லது தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு மாற்ற அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.