இலங்கையில் தாக்குதல் நடத்தப்போவதாக கூறியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி என தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் ஒருவர் குறித்து மலேசிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
அவர் மலேசிய பொலிஸ் அதிபர் மீது தாக்குதலை நடத்த போவதாகவும் முக்கியமான காவல்துறை தலைமையகத்தின் மீதும் மலேசிய பாதுகாப்பு அமைச்சர் மீதும் தாக்குதல் நடத்தப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை விடுத்தவர் மலேசியா ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த தகவல்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவரின் எச்சரிக்கைகள் மலேசியாவின் பல்வேறு ஊடகங்களுக்கும் கிடைத்துள்ளதாக மலேசிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக மலேசிய பொலிஸார் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளனர்.