இந்திய வீரரின் புதிய சாதனை …

இந்திய அணித்தலைவர் தலைவர் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 23 ஓட்டங்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 12,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309 வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ஓட்டங்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார்.

அதை கோலி இன்று முறியடித்துள்ளதோடு அந்த இலக்கை கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251 வது ஒருநாள் ஆட்டம்) மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்களில் மூன்றாவது இடத்தில் 314 இன்னிங்ஸில் ரிக்கி பொண்டிங்கும் நான்காவது இடத்தில் 336 இன்னிங்ஸில் குமார் சங்கக்காரவும் சனத் ஜயசூர்ய 379 இன்னிங்ஸிலும் பெற்றுக்கொண்டனர்.

Related posts