அமெரிக்க தூதுவரை சந்தித்து பேசினார் டக்ளஸ் தேவானந்தா..!!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நேற்று(செவ்வாய்கிழமை) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் ரெப்லிட்ஸ் நேற்று, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, காலநிலை மாற்றத்தினை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள தீர்மானித்துள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், இதற்காக கடற்றொழில் அமைச்சு சார்பாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts