வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் – மோடி

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், கடினமாக உழைக்கும் இந்திய விவசாயிகளின் நலனை காப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது என குறிப்பிட்டார்.

மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களால் நாட்டில் விவசாயம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு புதிய பரிணாமம் கிடைத்துள்ளது எனவும் மோடி தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மீதான கட்டுப்பாடுகள் உடைத்தெறியப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பல புதிய உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts