யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!…..

யாழ்ப்பாணம்- கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞன் தாயாரிடம் பணம் கேட்டதாகவும் தாய் பணம் கொடுக்க மறுத்துள்ளதால் கோபமடைந்து தனது அம்மம்மாவின் வீட்டிற்கு சென்று அங்கு அவர் தூக்கில் தொங்கியுள்ளார்.

மகன் கோபமடைந்ததை புரிந்து கொண்ட தாய் தனது தாய் வீட்டிற்கு மகனை தேடி போனபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து குறித்த இளைஞனை மீட்டு வரணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வரணி கரம்பைக் குறிச்சியை சேர்ந்த மகேந்திரம் தினோஜன் (வயது – 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related posts