மன்னாரில் மேலும் 4பேருக்கு கொரோனா!- பலர் சுயதனிமைப்படுத்தலில்

மன்னார் மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் டி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது,  “மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின்போது 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களின் 3பேர் முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள சவேரியார்புரத்தில் மீன்வாடி அமைத்து, கடற் தொழிலில் ஈடுபட சிலாபத்தில் இருந்து வந்தவர்கள்.

Related posts