சுவையான பீட்ரூட் மசாலா … இனி வீட்டிலேயே செய்யலாம் ‘……

தேவையான பொருட்கள்:


பீட்ரூட் – கால் கிலோ

சிறிய  வெங்காயம் – 10

பூண்டு (நசுக்கியது) – 3

தக்காளி – 1

மிளகாய் தூள் – 1

டீஸ்பூன்மஞ்சள் தூள் -1/4

டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு
தாளிக்க:

எண்ணெய் – 1

டேபிள்ஸ்பூன்கடுகு – 1

டீஸ்பூன்சோம்பு  – 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:

முதலில் பீட்ரூட்டை தோலுரித்து, நன்கு கழுவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். 
தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில்  எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். 
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கி, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். 
பின் காயைச் சேர்த்து நன்றாக வதக்கி, கால் கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, மூடி போட்டு வேக விடவும். இடையிடையே கிளறி விட்டு, காய் நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சத்தான பீட்ரூட் மசாலா ரெடி.

Related posts