சிறைக் கலவரத்தின் பின்னால் மறைக்கப்பட்ட நோக்கம் அரசாங்கம் சந்தேகம்..!!

நேற்றிரவு ஏராளமான கைதிகள் கொல்லப்பட்ட மஹர சிறைக் கலவரத்தின் பின்னணியில் ஒரு மறைக்கப்பட்ட நோக்கம் இருப்பதாக அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் மஹர சிறையில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணை சி.ஐ.டி. யினரிடம் ஒப்படைக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறும் குழுநிலை விவாதத்தில் மஹர சிறையில் நடந்த கலவரம் தொடர்பாக எதிக்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதில் வாங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பலர் இன்று சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து இதுவரை 1,099 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக வெலிக்கடையில் 386 பேருக்கும் மஹர சிறையில் 198 பேருக்கும் பழைய போகம்பரை சிறையில் 175 பேருக்கும் கொழும்பு ரிமாண்ட் சிறையில் 157 பேருக்கும் மகசீன் சிறையில் 46 பேருக்கும் குருவிட்ட சிறையில் 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இதேவேளை சிறைக் கலவரத்தின் பின்னணியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts