இறுதி நேரத்தில் சம்பந்தனை சந்தித்த அஜித் டோவால்…!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், நேற்று மாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இந்த சந்திப்பு இடம்பெற்றமையை எமது செய்தி சேவைக்கு உறுதிசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், வடக்கு கிழக்கின் அபிவிருத்தி சம்பந்தமாக இதன்போது பிரதானமாக அவதானம் செலுத்தியதாக குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் தமிழ் மக்களுடைய பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இலங்கை வந்திருந்த அஜித் டோவால், நேற்றைய தினம் நாட்டிலிருந்து புறப்பட இருந்த இறுதி நேரத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுகிறது.


Related posts