இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய ஹவுஸில் இந்தச் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் அரசியல் விவகாரங்கள் மற்றும்  வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவை சென்றடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts