இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..!!

இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக தெரிவித்துள்ள சீனா, மாசுபட்ட தண்ணீரால் வுகான் வரை பரவியதாக கூறியுள்ளது.

இந்த நிலையில், சீனாவின் நாளிதழ் ஒன்றில் வெளியான இந்த ஆய்வு முடிவு அபத்தமானது என்று கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தின் நிபுணர் டேவிட் ராபர்ட்சன் நிராகரித்துள்ளார்.

Related posts