மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கிப் படையெடுத்துள்ளனர். அவர்களை டெல்லிக்குள்…
மேலும்Day: November 29, 2020
பி.சி.ஆர்.பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டார் பிரதமர்?
கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மனைவியான சிராந்தி ராஜபக்ஷவும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றே இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “பிரதமரும் அவரது மனைவியும் தங்களை பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டனர் என அறிய முடிகின்றது. ஆனால் பரிசோதனை முடிவுகளில் அவர்களுக்கு தொற்று இல்லை…
மேலும்யாழ்ப்பாணத்தை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா? – கேதீஸ்வரன் விளக்கம்
யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து…
மேலும்மொத்த கொரோனா மரணங்களில் 81 பேர் கொழும்பில்
இலங்கையில் நேந்றை தினம் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 08 பிரதேசத்தை சேர்ந்த 96 வயதுடைய…
மேலும்PHI களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினர் சேவையில்
பேருவளை மற்றும் களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள காரணத்தினால் அவர்களுக்கு பதிலாக டெங்கு ஒழிப்பு பிரிவினரின் சேவையை அனுகியுள்ளனர். அதனடிப்படையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இவர்கள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உதவியுடன் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்கிழக்கில் 177 பேருக்கு கொரோனா உறுதி ..!!
கிழக்கில் தற்போதைய பி.சி.ஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம் 177 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார். அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், திருகோணமலை…
மேலும்ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்..!!
ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். அத்தோடு, அரசை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் குழந்தை வடிவ பொம்மை ஒன்றையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு செய்யும் சட்ட மூலத்திற்கு ஒப்புதல்…
மேலும்இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது – சீனா குற்றச்சாட்டு..!!
இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் தம் நாட்டிற்கு பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவின் நாளிதழ் ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இத்தாலி, அமெரிக்கா, ஐரோப்பா என 8 நாடுகள் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றம் சுமத்திய சீனா, தற்போது இந்தியாவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விலங்குகளிடமிருந்து…
மேலும்கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரம்..!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு 02ஐச் சேர்ந்த 76 வயதான ஆணொருவர் கடந்த 26ஆம் திகதி…
மேலும்