பிரதமர் அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!!


பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என பிரதமர் மகிழ்சிகரமான செய்தியை கூறியிருக்கின்றார்.

இது எங்களுக்கும் சந்தோசமான விடயம் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த ஆட்சியின் போது மலையக மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திகளை மேற்கொண்டிருந்தோம். காணி வழங்கியிருந்தோம். தனி வீடுகள் அமைத்து கொடுத்திருக்கின்றோம். பல காரியங்களை செய்திருக்கின்றோம்.

எனினும், எங்களால் செய்ய முடியாமல் போன ஒரு விடயம் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க முடியாமல் போனதாகும். அதற்கு காரணம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts