திங்கட் கிழமை முதல் பஸ் போக்குவரத்தில் மாற்றம்..!!

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Related posts