எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழப்பு..!!

எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ரஜோரி அருகே எல்லையை பாதுகாக்கும் பணியில், இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, எந்ததொரு அறிவிப்பும் இன்றி பாகிஸ்தான் இராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  இந்திய வீரர்கள் மூவர் உயிரிழந்ததுடன் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய இராணுவம் பாகிஸ்தான் இராணுவத்துக்கு பதிலடி கொடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீவிரவாதிகளை எல்லைத் தாண்டி ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் இராணுவத்தினர் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவது வழக்கம் எனவும் இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts