விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட வாழ்த்து..!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான இன்று அவருக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனாலேயே இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் உரையாற்றும் போதே இவ்வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

விடுதலைப்புலிகளால் வன்னிப்பகுதியில் உருவாக்கப்பட்ட காடுகள் இன்று அழிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் பல உருவாகி வருகின்றன.

நாங்கள் ஜே.வி.பியினர் போன்று முழு நாட்டிற்காகவும் சண்டையிடவில்லை. எமது அடிப்படை உரிமைகளுக்காகவே போராடினோம்.

மகாவலி அதிகாரசபையால் தமிழ் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எமது மக்கள் இத்திட்டத்தினால் தமது நிலங்களை கொடூரமாக இழந்துள்ளனர்.

தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதன் பின்னர், எங்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகளை முன்கூட்டியே அறிந்துதான் எமது இனத்தையும், மண்ணையும் காப்பாற்றுவதற்காக பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டார்.

அவர் இல்லாத இன்றைய நிலையிலே பல தமிழர் கிராமங்கள் பறிபோயுள்ளன. மேலும் இன்றைய நாளில் பிறந்த நாளைக்கொண்டாடும் தலைவர் பிரபாகரனிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related posts