வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகுமென கூறப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வலுப்பெறும் என்றும், அதன் பின்னரே அது புயலாக உருவெடுக்குமா இல்லையா என்பது தெரியவரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று அதிகாலை கரையைக் கடந்த நிவர் புயலால் வட தமிழகத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts