மீண்டும் தடுப்பூசி சோதனையை தொடங்கவுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா அறிவிப்பு..!!

தடுப்பூசி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், உலகளவில் மீண்டும் சோதனையை புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கல் சோரியட் தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய விலை மலிவான, சுலபமாக தயாரிக்கக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசியில் உற்பத்திக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அஸ்ட்ராஜெனெகா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆச்சரியமாக இரண்டு முழு டோஸ்களை பெற்ற தன்னார்வலர்களைக் காட்டிலும் குறைந்த டோஸ்களை பெற்ற தன்னார்வலர்களின் குழு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக தோன்றியது. குறைந்த டோஸ்கள் பெற்ற குழுவில் தடுப்பூசி 90 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.

இரண்டு முழு டோஸ்களை பெற்ற குழுவில் தடுப்பூசி 62 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது’ எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், தடுப்பூசியின் செயல்திறனில் வௌ;வேறு டோஸ்களில் ஏன் இவ்வளவு பெரிய மாறுபாடு இருந்தது, மேலும் ஒரு சிறிய டோஸ் ஏன் சிறந்த முடிவுகளைத் தோற்றுவித்தது? என்பதேயாகும். இந்த நிலையில் இந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உலகளவில் மீண்டும் சோதனையை புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா அறிவித்துள்ளது.

Related posts