சுமந்திரன் என்னுடன் பேசவேயில்லை – திருமதி. ஜோசப் பரராஜசிங்கம்..!!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பிர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 5 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கடந்த வாரம் பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், திருமதி. பரராஜசிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தான் அந்த வழக்கில் ஆஜரானதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், திருமதி. ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுடன் சுமந்திரன் பேசவேயில்லை என்று தெரியவருகின்றது.

திருமதி. பரராஜசிங்கம் சார்பாக சுமந்திரன் அந்த வழங்கில் முன்னிலையாக பரராஜசிங்கத்தின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது உறவினர்களோ சுமந்திரனுக்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அறியமுடிகின்றது.

இந்த விடயம் தொடர்பாக கனடாவில் வசிக்கும் திருமதி. சுகுணம் பரராஜசிங்கத்துடன் தொடர்பு கொண்ட போது, சுமந்திரனுக்கு தமது குடும்பம் சார்பில் வாதாடுவதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக பிரித்தானியாவில் வசிக்கும் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் மகன் டேவிட் பரராஜசிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, ‘இந்த வழக்கு விடயமாக தன்னுடனோ அல்லது தனது தாயாருடனோ சுமந்திரன் தொடர்புகொண்டு அனுமதி கோரவில்லை என்றும், தனது மைத்துனரை அவர்கள் தொடர்பு கொண்ட போதும் திருமதி. பரராஜசிங்கம் மற்றும் பிள்ளைகளே இது தொடர்பாக முடிவு எடுக்கமுடியும் என்று அவர் கூறியிருந்ததாகவும்’ தெரிவித்தார்.

இந்த வழக்கை கொண்டு நடாத்துவதற்கு தமது குடும்பத்தில் சார்பில் யாருமே சுமந்திரனுக்கு அனுமதி வழங்கவில்லை என்பதுடன், இந்த விடயத்தில் தனது தாயாரின் பெயரை சுமந்திரன் பயன்படுத்தியது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, குறிப்பிட்ட இந்த வழக்கில் திடீரென்று சுமந்திரன் முன்னிலையானதானது, கிழக்கில் ஒரு பிரதேசவாதத்தை ஏற்படுத்த நினைக்கும் சில தரப்புக்களின் சதிக்கு வலுச்சேர்ப்பதாக இருப்பதாக த.தே.கூட்டமைப்பு ஆதரவாளர்கள் சிலர் சுட்டிக்காண்பித்திருந்தார்கள்.

சிறையில் இருந்து வெளிவந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பிள்ளையான், சுமந்திரன் தொடர்பாகக் கூறியிருந்த விடயம் இதற்கு ஒரு உதாரணம்

Related posts