புதிய பொலிஸ்மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்..!!

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன சற்றுமுன்னர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார். இதுவரை, பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட இவரின் பெயர் கடந்த தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொலிஸ்மா அதிபராக பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அது…

மேலும்

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு..!!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜெனரல் மைக்கேல் பிளினுக்கு முழு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பது எனது பெரிய மரியாதை. ஜெனரல் பிளின் மற்றும்…

மேலும்

மட்டக்களப்பில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் இடம்பெற்ற வானக விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மரம் ஏற்றுவதற்கு சென்றுகொண்டிருந்த லொறியும் பொருட்கள் ஏற்றிவந்துகொண்டிருந்த கன்டைனர் லொறியும் நேருக்கு நேர் மோதி, மின்சார தூணில்…

மேலும்

கரவெட்டி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்..!!

வடமராட்சி தெற்கு- மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 31 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்கு- மேற்கு பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,  தவிசாளர்…

மேலும்

கொவிட்-19 தொற்றினால் 57ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 57ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் 57ஆயிரத்து 031பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 15இலட்சத்து 74ஆயிரத்து 562பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 17ஆயிரத்து 555பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 498பேர் உயிரிழந்துள்ளனர்.…

மேலும்

மீண்டும் தடுப்பூசி சோதனையை தொடங்கவுள்ளதாக அஸ்ட்ராஜெனெகா அறிவிப்பு..!!

தடுப்பூசி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், உலகளவில் மீண்டும் சோதனையை புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கல் சோரியட் தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய விலை மலிவான, சுலபமாக தயாரிக்கக்கூடிய கொரோனா வைரஸ் தடுப்பூசி 90 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும் என சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால்…

மேலும்

நுவரெலியாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா- பல குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன..!!

நுவரெலியா- பொகவந்தலாவ சுகாதா வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில், 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டில்லரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர் தோட்டம், பொகவந்தலாவ செல்வகந்தை தோட்டம், பொகவந்தலாவ பொகவான தோட்டம், பொகவந்தலாவ மோர ஆகிய தோட்டங்களை சேர்ந்த 52, 32, 21, 26  ஆகிய…

மேலும்

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை..!!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்துள்ளது. தலைநகர் அங்காராவுக்கு அருகிலுள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி அரசாங்கத்தை…

மேலும்

இலங்கையில் கொவிட் மரணங்கள் 99 ஆக உயர்வு! இன்றும் மூவர் பலி..!!

இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் மூன்று மரணங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்டி, மொத்த மரணங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. 1. கொழும்பு 8 பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதான ஆண் ஒருவர்…

மேலும்

சுமந்திரன் என்னுடன் பேசவேயில்லை – திருமதி. ஜோசப் பரராஜசிங்கம்..!!

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பிர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு கடந்த 5 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு கடந்த வாரம் பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், திருமதி. பரராஜசிங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தான் அந்த வழக்கில் ஆஜரானதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், திருமதி. ஜோசப்…

மேலும்