நகரசபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத மாவட்டம்

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டம் மாத்திரமே நகரசபையோ அல்லது மாநகர சபையோ இல்லாத மாவட்டமாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சு. நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (24) நடை பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இங்கு இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளில் ஒன்றையாவது நகரசபை என்ற நிலைக்குத் தரம் உயர்த்தி தர வேண்டும் , ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவையும், மடு பிரதேச செயலக பிரிவையும் தனியான பிரதேச சபையாக உருவாக்குவதற்கு அரசாங்கம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Related posts