சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 30 முதல் இன்று காலை வரையான காலப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இன்று (வியாழக்கிழமை) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் அனைத்து குடிமக்களும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் ஏனைய அனைத்து இடங்களிலும் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட வர்த்தமானி அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை புறக்கணித்ததாகக் கண்டறியப்பட்ட எந்தவொரு ஸ்தாபனத்தின் நிர்வாகத்திற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts