கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரண குணம்..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரையில் 21 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில்…

மேலும்

முதல் லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ்- கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதல்..!!

பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் ஆரம்பமாகவுள்ள லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், முதல் லீக் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதவுள்ளன. இதில் கொழும்பு அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸூம் கண்டி அணியின் தலைவராக குசல் பெரேராவும் தலைமை தாங்கவுள்ளனர். முதல்முறையாக…

மேலும்

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்கிளே நியமனம்..!!

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக நியூஸிலாந்தின் கிரேக் பார்கிளே நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார்.…

மேலும்

இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் சமல் ராஜபக்ஷ..!!

அரச பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று (வியாழக்கிழமை) சத்தியபிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பொது பாதுகாப்பு அமைச்சராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். பொலிஸ் திணைக்களம்,…

மேலும்

இலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்..!!

இலங்கைக்கு 165 மில்லியன் அமெரிக்க டொலரை கடனுதவியாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கருத்திற்கொண்டே இந்த கடனுதவி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஆசிய அபிருத்தி வங்கி அலுவலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பெண்கள் மற்றும் தேயிலை சிறு…

மேலும்

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் ..!!

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், ‘மாவீரர்கள் எமது மண்ணின் காவலர்கள். இந்த மண்ணையும் மக்களையும் அளவுக்கு அதிகமாக நேசித்ததன் காரணமாகத் தேசிய விடுதலைப்…

மேலும்

வரவு செலவுத்திட்டம்- குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று!

இலங்கையின் 75ஆவது வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் விவாதம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. விவசாயம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக இன்றையதினம் விவாதிக்கப்படவுள்ளது. அத்தோடு பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சு உட்பட 6 இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் இன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர்…

மேலும்

சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர் 30 முதல் இன்று காலை வரையான காலப் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறிப்பாக இன்று (வியாழக்கிழமை) காலை…

மேலும்

உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்த குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் மரணம்

கொள்ளுப்பிட்டி குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (வியாழக்கிழமை) காலை உடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த அதிகாரி திடீர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை…

மேலும்

பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்பு

பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சரத் வீரசேகர பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் இந்த நியமணம் சற்று முன்னர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்