பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமென்றால், 20 வருடங்களுக்கு முன்னர் எவ்வித சாட்சிகளும் இன்றி கைது செய்யப்பட்டு துன்புறுத்தல்களுக்கு இலக்காகி இத்தனை வருடங்கள் சிறையில் இருக்கும் எங்களது தமிழ் இளைஞர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இந்த 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மன்னாரில் கஞ்சாவுடன் பிடிபட்ட கருணாவின் இணைப்பாளர் இனியபாரதிக்கு பிணை வழங்கப்பட்டிருக்கின்றது. இன்று பிள்ளையானுக்கும் பிணை வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.