ஜனாதிபதி தலைமையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொருளாதார உச்சி மாநாடு

இலங்கையின் முன்னணி பொருளாதார உச்சி மாநாட்டை 2020 டிசம்பர் 1 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2020 டிசம்பர் 2 ஆம் திகதி உச்சிமாநாட்டின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

டிசம்பர் 1 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் இம் மாநாட்டின் தொடக்க அமர்வில், முக்கிய பேச்சாளர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கையின் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் தலைவர் ஹான்ஸ் விஜயசூரிய ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளனர்.

முதன்மை உச்சிமாநாடு சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒரு மெய்நிகர் வடிவத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் உயர் சர்வதேச சிந்தனைத் தலைவர்களின் உள்ளீடு ஆகியவை ஒன்றிணைந்து துரிதப்படுத்தப்பட்ட மற்றும் மக்களை நோக்கிய பாதையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை அடையாளம் காணும் நடவடிக்கையாக இப் பொருளாதார உச்சி மாநாடு அமையுமென தெரிவிக்கப்படுகிறது.

Related posts