சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

தற்போது தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைக்கப்பெற்றமை தொடர்பாக 115 பேர் சாட்சி வழங்கியுள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சட்டத்தரணி ஹிஸ்புல்லா தொடர்பான சாட்சியங்களின் அறிக்கை நீதிமன்றில் முன்வைக்கப்பட்டால், அந்த தகவல்கள் வெளியாகி, விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப் பீரிஷ் நீதிமன்றில் தெரிவித்தார்.

Related posts