கொரோனா அச்சம் – பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை

அம்பலாங்கொட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அவர்களுக்கு இன்றைய தினம் (புதன்கிழமை) பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

குறித்த பாடசாலைகளில் கல்வி கற்கும் அம்பலாங்கொடை – நிலகபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்தே குறித்த பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Related posts