முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் – மனுஷ நாணயக்கார

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை புதைப்பதற்கு அனுமதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், மதம், இனம் அரசியல் என்பதை காரணம் காட்டி இதனை பிரிக்காது பொதுவாக இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு 200 மேற்ப்பட்ட நாடுகள் அதற்கு அனுமதி வழங்கியுள்ளன என்பதை சுட்டிக்காட்டிய மனுஷ நாணயக்கார, உலக சுகாதார ஸ்தாபனம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசிக்கு மாத்திரம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி வேண்டுமென கூறும் அரசாங்கம்,  உடல்களை புதைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பொருட்படுத்தவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார கேள்வியெழுப்பினார்.

Related posts