கொரோனா தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 7 பில்லியன் ஒதுக்கீடு

கொரோனா தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கிட்டத்தட்ட 7 பில்லியன் ரூபாயினை ஒதுக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, கொழும்பு மற்றும் கம்பஹாவில் வசிப்பவர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

கொரோனா நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அனைத்து அபிவிருத்தியையும் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்தோடு நாட்டின் அனைத்து துறைகளும் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல் குறிப்பிட்டார்.

Related posts