முதல் 10 எம்.பிக்களில் 7ஆம் இடம் பிடித்த ஒரேயொரு தமிழ் எம்.பி.!

நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாக செயற்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுள் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி. ஒருவரும் இடம்பிடித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரே 7ஆவது இடத்தில் உள்ளார்.

நாடாளுமன்றம் வருகை, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே manthri.lk என்ற இணையத்தால் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

Related posts