கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரிப்பு..!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 9,050,598 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.78 இலட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது:

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 564 போ் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 132,726 ஆக அதிகரித்துவிட்டது. இது மொத்த பாதிப்பில் 1.46 சதவீதமாகும். இப்போதைய நிலையில் நாட்டில் 439,747 போ் கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனா்.

கடந்த 24 மணி நேரத்தில் 49,715 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,478,124 ஆக அதிகரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி நவம்பா் 20 ஆம் திகதி வரை 130,657,808 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வெள்ளிக்கிழமை மட்டும் 1,066,022 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts