பிரித்தானியா தடுப்பூசி மையங்களை அமைக்க தயாராகவுள்ளது..!!

பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவை, கொரோனா வைரஸ் தடுப்பூசி மையங்களை அமைத்து வருவதாக சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள தளங்களிலும், மருத்துவமனைகளிலும், சமூகத்தில் உள்ள பொது மருத்துவராலும் மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசியை மதிப்பீடு செய்ய மருத்துவ கட்டுப்பாட்டாளரை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுள்ளது.

ஹான்காக், கட்டுப்பாட்டாளர் அதை அங்கீகரித்தால், தடுப்பூசி அடுத்த மாதம் தொடங்கலாம் என கூறினார்.

ஆனால், தடுப்பூசி தயாரிப்பின் பெரும்பகுதி புதிய ஆண்டில் இருக்கும் என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Related posts